கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நம்பேடு கிராமத்தில் சேத்துப்பட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் நம்பேடு கிராமத்தில் வசிக்கும் ராஜேஷ்குமார் என்பதும், மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராஜேஷ்குமாரை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.