25 கிலோ கஞ்சாவை விற்க முயன்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஹரிகரன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேட்டை சாலையில் உள்ள கல்லறைத் தோட்டம் பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிங்கிகுளம் பகுதியில் வசிக்கும் ஐகோர்ட் மகாராஜா என்பதும் மேலும் இவர் கஞ்சா வியாபாரியான மணியின் கூட்டாளி என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் ஐகோர்ட் மகாராஜாவிடம் இருந்து 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் நிருபர்களிடம் கூறுவதாவது, திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக தனிப்படை அமைத்து தீவிர தடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். அதன் பேரில் சி றையில் ஏற்கனவே உள்ள பேட்டை மணி, தினேஷ், சரண்யா, சுந்தர் ஆகியோரின் கூட்டாளியான ஐகோர்ட் மகாராஜா பேட்டையில் 25 கிலோ கஞ்சாவை விற்பனை செய்ய முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கஞ்சா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கஞ்சா விற்பனை விவகாரத்தில் சிறையில் உள்ள பேட்டை மணி முக்கிய குற்றவாளியாக இருந்துள்ளார். எனவே தற்போது கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம் என போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.