சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவன்மலை பகுதியில் காங்கேயம் காவல்துறையினருக்கு கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பூர் சாலை ராமபட்டினம் பிரிவு நால்ரோடு பகுதியில் ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தனர்.
இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ராமபட்டினம் பகுதியில் வசிக்கும் சிவகுமார் என்பதும் மேலும் அவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சிவகுமாரை கைது செய்ததோடு அவர் வைத்திருந்த 1 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.