சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த மீனவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புன்னக்காயல் அருகில் உள்ள சோதனை சாவடியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் புன்னக்காயல் பகுதியில் வசிக்கும் மீனவரான ஜெயராஜ் என்பதும் இவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஜெயராஜை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.