Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர் நந்த கோபாலபுரம் பகுதியில் வசிக்கும் மகேந்திரன் என்பதும், மேலும் அவர் கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மகேந்திரனை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 1 கிலோ 60 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |