கஞ்சா விற்ற 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நல்லியான் தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் முத்துலட்சுமி, சுகன்யா என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.