கஞ்சா விற்பனை செய்த வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆத்துப்பாளையம் பகுதியில் வேலம்பாளையம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மனோரஞ்சனை கைது செய்ததோடு அவரிடமிருந்த 3 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.