சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செய்துங்கநல்லூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் செய்துங்கநல்லூர் பகுதியில் வசிக்கும் முத்துப்பாண்டி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் அவர் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிளில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்துப்பாண்டியை கைது செய்ததோடு அவரிடம் இருந்த ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.