Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சந்தவாசல் காவல்துறையினருக்கு சித்தூர்-போளூர் நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர் வடுகசாத்து கிராமத்தில் வசிக்கும் வினோத் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு  பதிவு செய்த காவல்துறையினர் வினோத்தை கைது செய்ததோடு அவரிடமிருந்த 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |