சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை தொழில் அதிகரித்து உள்ளது. இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல் துறையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து அந்தப் பகுதியில் 7 பேர் கொண்ட கும்பல் சந்தேகம் படும்படியாக சுற்றித் திரிந்து உள்ளனர்.
இதனை அடுத்து காவல்துறையினர் அந்த 7 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பின் காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 24 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 7 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.