Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபர்கள்… மடக்கி பிடித்த கிராம மக்கள்… பறிமுதல் செய்யப்பட்ட 3 கிலோ கஞ்சா…..!!

கஞ்சா விற்பனை செய்த இரு வாலிபர்களை  கிராம மக்கள் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூரில் உள்ள கருமத்தம்பட்டி அருகே வெளியூரை சேர்ந்த சில இளைஞர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் பேசிக் கொண்டு அலைந்துள்ளனர். அவர்களின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் அவர்களை  பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த இளைஞர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் மேலும் சந்தேகமடைந்த ஊர்மக்கள் அவர்கள் வைத்திருந்த பையை பிடுங்கி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனே அந்த இளைஞர்கள் கிராம மக்களிடமிருந்து தப்பி சென்றுள்ளனர். அதில் இருவரை மட்டும் கிராம மக்கள் மடக்கி பிடித்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து கஞ்சாவை  பறிமுதல் செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காவல்துறையினர்  நடத்திய விசாரணையில் ஒருவர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சிவபாலன் என்பதும் மற்றொருவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகரன் என்பதும்  தெரியவந்தது. பின்னர்  அவர்களிடமிருந்து விற்பதற்காக கொண்டு வரப்பட்ட 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய இருவர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |