சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இளந்தோப்பு பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகுல்பிரசாத் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் கோகுல்பிரசாத் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் ஆகியோர் கோகுல் பிரசாத் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து கஞ்சா கடத்தி விற்பனை செய்த குற்றத்திற்காக கோகுல்பிரசாத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மணல்மேடு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.