கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் நாகமாணிக்கம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் அமராவதி ஆற்றுப் பாலத்தின் அடியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் கபாலி என்கிற லட்சுமணன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.