Categories
தேசிய செய்திகள்

காங். ஆட்சியை கவிழ்க்கும் பாஜகவின் திட்டம் தோல்வி – அசோக் கெலாட்

ராஜஸ்தான் அரசை கவிழ்க்க நினைத்த பாஜகவின்  திட்டம் தகர்ந்து விட்டதாக முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் திரு. அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த திரு. சச்சின் பைலட் தனது ஆதரவாளர்கள் 18 பேருடன் போர்க்கொடி உயர்த்தினார். இதனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி சிக்கலில் தவித்து வந்தது. இப்பிரச்சனைக்கு ஓரளவுக்கு முடிவுக்கு வந்த நிலையில் காங்கிரஸ் அரசு தப்பியது. இந்நிலையில் இந்த செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் கட்சியில் அமைதியும், சகோதரத்துவமும் ஏற்பட்டதாகவும் குறைகளை தீர்க்க மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசை கவிழ்க்க பாஜக மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒன்றாக உள்ளனர் என்றும், ஒருவர் கூட தங்களை விட்டு விலகவில்லை எனவும் முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |