Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

4 மாதமாக வழங்கவில்லை…. இரவு பகலாக பணிபுரியும் குழுவினர்…. அதிகாரிகளின் தகவல்…!!

கடந்த 4 மாதங்களாக சம்பளம் வாங்காமல் கண்காணிப்பு குழுவினர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் பொது மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே ஊருக்குள் நுழையும் யானைகளை காட்டுக்குள் விரட்டும் பொருட்டு அதிகாரிகள் கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளனர். இந்த குழுவினருக்கு 6,750 ரூபாய் மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. ஆனால் இந்த கண்காணிப்பு குழுவில் பணியாற்றுபவர்களுக்கு கடந்த 4 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.

இதனை அடுத்து பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் கண்காணிப்பு குழுவினர் இரவு, பகலாக கடுமையாக பணிபுரிந்து வருகின்றனர். எனவே சம்பளம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, கண்காணிப்பு குழுவினருக்கு கூடுதல் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |