Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காங்கிரஸ் கட்சி சார்பாக…. நடைபெற்ற போரட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து அரசினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வினால் சைக்கிள்களில் ஊர்வலமும், போராட்டம் நடைபெற்றது. இந்த சைக்கிள் ஊர்வலம் வாணியம்பாடி காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம் பாஷா தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து ஜமாத் சாலை, கச்சேரி சாலை, ஜின்னா சாலை, சி.எல். சாலை, பேருந்து நிலையம் வழியாக சைக்கிளில் ஊர்வலமாக சென்றுள்ளனர். அப்போது மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டியும், பிரதமர் மோடி பதவி விலக கோரி கோஷங்களை எழுப்பினர்.

இதேபோன்று காங்கிரஸ் கட்சி மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜய் இளஞ்செழியன் தலைமையில், வாணியம்பாடி பெட்ரோல் பங்க் முன்பு போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் முடிவடைந்த பின் மத்திய அரசுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தினர். மேலும் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் முன் போராட்டம் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இதனை மாவட்ட தலைவர்  ச.பிரபு தொடங்கிவைத்து தொகுதி செயலாளர் பரத் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்ககோரி மக்களிடம் கையெழுத்து பெற்றுள்ளனர். இந்த போராட்டத்தில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், வெங்கடேசன், நெடுமாறன், விஜயராகவன், மகேந்திரன், ரவி, ஒன்றிய தலைவர் ஜாவித் மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |