Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைமை – பிரியங்கா புதிய யோசனை

ராஜீவ் காந்தி குடும்பத்தை சாராதவர்கள் காங்கிரஸ் தலைமை ஏற்க வேண்டும் என திருமதி பிரியங்கா காந்தி யோசனை தெரிவித்துள்ளார்.

ஊடகத் துறையில் ஏற்பட்டுள்ள தற்போதைய புதிய சூழலை காங்கிரஸ் உணர்வதற்கு காலதாமதமாவதாகவும் வந்த அவர் தெரிவித்துள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் பெரும் பின்னடைவை காங்கிரஸ் சந்தித்ததை தொடர்ந்து ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதனைத்தொடர்ந்து திருமதி சோனியா காந்தி தற்போது காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார்.

எனினும் காங்கிரஸ்சிற்கு நிரந்தர தலைவர் யார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த சூழலில் இந்தியாவின் அடுத்த கட்டத் தலைவர்கள் என்ற புத்தகத்தில் தனது கருத்தை வெளியிட்டு உள்ள பிரியங்கா ராஜீவ் காந்தி குடும்பத்தை சாராதவர்கள் காங்கிரஸ் தலைமையை ஏற்க வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளார். பாஜக கட்சி தனது கணவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தெரிவித்துவருவதாகவும் திருமதி பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |