மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்ரமங்கலத்தில் சுமார் 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய் பகுதியை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உசிலம்பட்டி அருகே உள்ள விக்ரமங்கலம் கிராமத்தின் சுமார் 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிக பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாயை சுற்றியுள்ள 8 க்கு மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக இந்த கண்மாய் விளங்குகிறது. இந்நிலையில் சிலர் இந்த கண்மாயை ஆக்கிரமித்து விவசாய நிலமாக மாற்றி நெல் பயிரிட்டு விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் கண்மாய்களுக்கு தண்ணீர் தேடி வரும் வன விலங்குகள், பறவைகள், கால்நடைகளை விரட்டி அடிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 8 கிராம விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் கண்மாய் பகுதியை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.