நடிகர் சசிகுமார் நடிக்கிற நானா திரைப்படத்தில் ஒரு கன்னட நடிகர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜனரஞ்சகமான திரைப் படங்களில் நடிக்கிற நடிகர் சசிகுமார் நடிப்பில் கடைசியாக பேட்ட படத்தில் நடித்து இருந்தார்.அடுத்ததாக கென்னடி கிளப் திரைப்படம் ரிலீஸ் ஆகியது. இதைத்தொடர்ந்து இப்போது நிர்மல் குமார் இயக்கத்தில் , தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் தயாரிக்க்கும் நானா திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருக்கின்றார்.
ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாகதயாராக இருக்கும் இந்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில் தெலுங்கு நடிகை சித்ரா நடிக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது மும்பையில் நடந்து கொண்டு இருக்கின்றது. இந்த படத்தில் கன்னட நடிகர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே தெலுங்கு நடிகை_உடன் இந்த படத்தில் நடிக்கும் சசிகுமார் கன்னட வில்லனுடனும் நடிக்கிறார் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.