பிரபல கன்னட சினிமா தயாரிப்பாளர் கபாலி மோகன் என்கிற வி.கே மோகன் ஓட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கன்னட சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல கன்னட சினிமா தயாரிப்பாளர் கபாலி மோகன். இவருக்கு பெங்களூர் அருகிலுள்ள பீன்யா என்ற பகுதியில் ஓட்டல் ஒன்று இருக்கிறது.இந்த ஓட்டலில் கடந்த மூன்று நாட்களுக்கு அவர் தங்கியிருந்துள்ளார். அதன் பிறகு அவர் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை அவர் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலைக்கு முன்னதாக செல்பி வீடியோவில் ஏன் இந்த முடிவை எடுத்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார். அதில், பீன்யா பகுதியில் புதிய பேருந்து நிலையத்தில் கடைகளை வாடகைக்கு விடுவதற்கான ஏலத்தை இவர் எடுத்து இருந்தார். அந்த பேருந்து நிலையம் ஊரைவிட்டு தள்ளி ஒதுக்கு புறத்தில் இருந்ததால் மக்கள் பயன்பாட்டுக்கு அது வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மிகப்பெரிய நஷ்டம் அடைந்ததாக கூறிய அவர், அதனால் வங்கிக் கடனை கட்ட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னட சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்