கன்னட திரையுலகின் சீரியல் நடிகையான சௌஜன்யா என்பவர் நேற்று காலை பெங்களூரில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கன்னட படத்திலும் நடித்துள்ள சௌஜன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது சடலத்தை மீட்ட காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் எழுதப்பட்ட நான்கு பக்க கடிதம் ஒன்று அவர்களுக்கு கிடைத்துள்ளது.
அதில் சௌஜன்யா தான் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் சினிமாவிலும் சூழல் சரியில்லாமல் சிரமப்பட்டதாகவும் தற்கொலை முடிவைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்தக் கடிதத்தில் அவர் செப்டம்பர் 27, 28 மற்றும் 30 என மூன்று தேதிகளை குறிப்பிட்டு இருந்ததால் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் அவருக்கு மூன்று தினங்களுக்கு முன்பே வந்து இருக்கலாம் என காவல்துறையினர் கூறுகின்றனர்.