கவியரசன் கண்ணதாசன் அவர்கள் எத்தனையோ காலத்தால் அழியாத தன்னம்பிக்கை பாடல்களை எழுதியுள்ளார். அவை அனைத்திற்கும் சிகரம் வைத்ததுபோல் சுமைதாங்கி நிற்கும் பாடல் படத்தில் வரும் மயக்கமா கலக்கமா என்கின்ற பாடல் தான்.
இந்தப் பாடலோடு தொடர்புடைய உண்மை நிகழ்வுகள் இந்த செய்தித் தொகுப்பில் பகிரபட்டுள்ளது. கண்ணதாசன் சென்னைக்கு வரும் பொழுது அவருடைய வயது பதினாறு இருக்கும். காரைக்குடியில் இருந்து சென்னைக்கு கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் வந்திருக்கிறார். வருடம் 1943 சென்னையில் எக்மோரில் வந்து இறங்குகிறார் கண்ணதாசன். எங்கே செல்வது என்று தெரியவில்லை அவருக்கு. சென்னையில் தெரிந்தது எல்லாம் மண்ணடியில் இருக்கிற நகரத்தார் விடுதி தான்.
அங்கு தான் அவரது உறவினர்கள் தங்கி இருந்தார்கள். அதற்கு கூட எப்படி செல்வது என்று தெரியாது. இருள் சொல்லந்த நேரம் பீச்சின் ஒரு ஓரமாகப் படுத்து கொண்டு இருக்கிறார். ஆனால் காவல்துறையினரும் தூங்க விடவில்லை. யார் நீ இங்கே படுத்தி இருக்கிறாய் என்று கேட்டு இடத்தை காலி பண்ணு மாறு மிரட்டுகிறார்கள். இவர் தன் நிலைமையைச் சொல்ல அதெல்லாம் தெரியாது இடத்தை காலி பண்ணு இல்லைன்னா பணம் கொடுத்துவிட்டு படுத்துக்கோ என்று சொல்கிறார்கள். இருந்தாதானே கொடுப்பதற்குக் கூட இடமில்லாமல் அந்த இடத்தில் துரத்தப்பட்டார் கண்ணதாசன்.
இந்த நிலையில் பணம் இல்லாததால் பீச்சில் கூட படுக்க இடம் கிடைக்கவில்லை என்று பிற்காலத்தில் நினைத்திருக்கிறார். அதற்கப்புறம் கண்ணதாசன் சினிமாவில் வெற்றி பெற்று படம் தயாரிக்கிறார். விசாலாட்சி பிலிம்ஸ் அப்படிங்கற சொந்த பேனர்ல ஜெமினி கணேசனை வைத்து ஸ்ரீதர் என்பவரை இயக்குனராக அமர்த்தி சுமைதாங்கி என்ற படத்தை எடுக்கிறார் கண்ணதாசன். அந்த படத்திற்கு மயக்கமா கலக்கமா என்ற பாடல் எழுதுகிறார் கண்ணதாசன். அந்த பாட்டை எங்கு சூட் செய்தார் தெரியுமா? அவரை எந்த இடத்தில் படுக்க விடக்கூடாது என்று கருதினார்களோ அங்கேயே தான் சூட் செய்தார். இது மிகப்பெரிய சாதனையாக கண்ணதாசன் கருதினார்.