பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சி கன்னடத்தில் குக் வித் கிறுக்கு என்ற பெயரில் ரீமேக்காக உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது 2வது சீசன் கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமையல் செய்ய போட்டியாளர்கள் படாத பாடு படும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.
இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமான கோமாளிகளுக்கும் போட்டியாளர்களுக்கும் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் சூப்பர் ஹிட் அடித்துள்ள இந்த நிகழ்ச்சி கன்னடத்தில் குக் வித் கிறுக்கு என்ற பெயரில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழில் இந்த நிகழ்ச்சி வெற்றி பெற்றதைப் போல கன்னடத்திலும் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.