நடிகர் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் நட்சத்திரா நாயகனாக வலம் வரும் சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து நடிகர் சிம்பு மாநாடு ,பத்து தல ,நதிகளிலே நீராடும் சூரியன் என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் .
மேலும் சிம்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் நடிக்கும் படங்கள் குறித்த அப்டேட்டுகளையும் அவரது புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . இந்நிலையில் சிம்பு கண்ணாடி அணிந்து கண்ணாடி முன் நிற்கும் கருப்பு- வெள்ளைப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ‘எல்லாமே கருப்பு வெள்ளை அல்ல’ என பதிவிட்டுள்ளார் . சிம்புவின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .