Categories
சினிமா தமிழ் சினிமா

”பாரதி கண்ணம்மா” சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பை முடித்த கண்ணம்மா…. வெளியான புகைப்படம்…!!

‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங்கை கண்ணம்மா முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று” பாரதி கண்ணம்மா”. இந்த சீரியல் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷ்னி ஹரிப்ரியன் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது.

kannamma-cinemapettai9

இந்நிலையில், இவரின் கடைசி நாள் ஷூட்டிங் நிறைவடைந்து விட்டதாகவும், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக வருகிறது. இந்த புகைப்படத்தில் பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கின்றனர். ஆனால், ரோஷினி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |