‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய கண்ணம்மாவாக நடிக்க போகும் நடிகையின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று” பாரதி கண்ணம்மா”. இந்த சீரியல் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷ்னி ஹரிப்ரியன் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இவருக்கு பதிலாக வினுஷா என்ற நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, இவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வந்த நிலையில், இந்த சீரியலில் அவரின் லுக் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர். ஆனால், இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/CVpMZk7soPq/?utm_source=ig_embed&ig_rid=5ecdc1c8-c5ad-41f1-a385-71f367a34c4b