மூக்குத்தி அம்மன் நயன்தாராவை போல கண்ணம்மா இருக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
வீட்டில் இருக்கும் தாய்மார்கள் மற்றும் பெண்களுக்கு அவர்களது பொழுதுபோக்கை கழிப்பதற்கு சீரியல்கள் பெரிதும் உதவுகிறது. அதுவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது.
இந்த சீரியலில் கண்ணம்மாவின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது பாரதிகண்ணம்மா சீரியலும் மற்றொரு பிரபலமான ராஜா ராணி 2 சீரியலும் மகா சங்கமமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற தொடரில் கண்ணம்மா அம்மன் போல் வேடம் அணிந்து நடித்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் மூக்குத்தி அம்மன் படத்தில் வரும் நயன்தாராவைப் போலவே கண்ணம்மா இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.