விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டதையடுத்து புதிய ஆட்சியராக மேகநாதரெட்டி பொறுப்பேற்றுள்ளார்.
தமிழக அரசின் அறிவிப்பின்படி அனைத்து மாவட்ட ஆட்சியரையும் பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக மேகநாதரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை பெருநகர் மாநகராட்சி துணை ஆணையராக பணிபுரிந்துள்ளார்.
இதனையடுத்து நேற்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மேகநாதரெட்டி பொறுப்பேற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து இதற்கு முன் கண்ணன் அவரது பொறுப்புகளை புதிய மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் மேகநாதரெட்டி ஆந்திரா மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர். இந்நிலையில் 2015 டிசம்பர் முதல் 2018 வரை சேலம் மேட்டூரில் சார் ஆட்சியராக பணியாற்றியுள்ளார். 2018லிருந்து 2020 மார்ச் வரை நில நிர்வாகத்துறை துணை ஆணையராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.