கன்னி ராசி அன்பர்கள்…!!இன்று இடையூறு செய்தவர்களை அடையாளம் கண்டுகொள்வார்கள். புதிய முயற்சி ஓரளவு நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரம் மந்தமாகத்தான் இருக்கும். ஓரளவு பணவரவும் கிடைக்கும். தியானம் தெய்வ வழிபாட்டில் மனதை செலுத்துங்கள். அப்போதுதான் மனது அமைதி பெறும். மனது அமைதி பெற்று விட்டால் அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் இருக்கும். வாகனத்தில் செல்லும்போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை.அக்கம்பக்கத்தினரிடம் பழகும் போது கவனமாக இருங்கள். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம்.
கணவன் மனைவிக்குள் எந்தவிதப் பிரச்சினையுமில்லாமல் சமூகமாகவே இருக்கும். சகோதர வழியில் எதையும் பேசி தீர்த்துக்கொள்வது ரொம்ப நல்லது. எச்சரிக்கை என்பது ரொம்ப ரொம்ப அவசியம். பெண்களுக்கு திறமையான பேச்சு மூலம் எதையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க ஆதாயம் அடைவீர்கள். சொன்ன சொல்லை முடித்துக் காட்டுவீர்கள். இன்று நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும் இறைவழி பாட்டுடன் அனைத்து விஷயங்களையும் மேற்கொள்ளுங்கள். காதலர்களுக்கு எந்த சிரமங்களும் இல்லாமல் சிறப்பான நாளாக இருக்கும்.
இன்று முக்கியமான காரியங்களை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்க கூடியதாகவே இருக்கும். அது மட்டும் அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்களின் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை தெற்கு
அதிர்ஷ்ட எண் 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் இளம் நீல நிறம்