Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு..மன மாற்றம் மகிழ்ச்சி கொடுக்கும்..ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்..!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று மன மாற்றத்தால் மகிழ்ச்சி கிடைக்கும் நாளாகவே இருக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவார்கள். தந்தை வழி உறவில் ஏற்பட்ட தகராறுகள் அகலும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் அக்கறை ஆகவே இருங்கள். தொழில் வியாபாரம் சுமாராகவே இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும்,  செலவு பன்மடங்கு இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.பொருட்கள் மீது கொஞ்சம் கவனமாகவே இருங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள். படித்ததை எழுதிப் பாருங்கள், ஆசிரியர்களிடம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள், அவரிடம் எந்தவித வாக்குவாதம் செய்யாதீர்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |