கன்னி ராசி அன்பர்களே..!! உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாளாக இருக்கும். உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றும் வைத்து பேசுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். வழக்குகள் சாதகமாக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். காரியத்தடை, வீண் அலைச்சல், டென்ஷன் போன்றவை ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக இருங்கள்.
குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். எல்லாவற்றிலுமே சாதகமான பலனை இன்று அனுபவிக்க கூடும். பொருளாதார முன்னேற்றம், பணவரவில் திருப்தி ஆகியவையும் இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் . பெண்கள் அடுத்தவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேசுவது சிறந்தது. அலுவலகத்தில் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் பொறுமையைக் கடைபிடித்து வெற்றி காண்பீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்