கன்னி ராசி அன்பர்களே..! இன்று தனலாபம் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். தொழில் சம்பந்தமாக பெரியவர்களின் சந்திப்பு இனியதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் ஏற்றத்தைக் கொடுக்கும். பெண்களால் நன்மை கொஞ்சம் ஏற்படும். வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும், பார்த்துக்கொள்ளுங்கள். பொருள் வரவு கூடும். பயணங்கள் செல்ல நேர்வதால் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வெற்றி பெறுவதற்கு தடைகளை தாண்டிதான் முன்னேறிச் செல்ல வேண்டி இருக்கும்.
பெரியோரின் ஆலோசனைப்படி இன்று செயல்படுங்கள், ரொம்ப நல்லபடியாகவே இருக்கும். வாக்கு வன்மையால் அனைத்து நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கப் பெறும். வாகனத்தில் செல்லும் பொழுதும் ஆயுதங்களை கையாளும் பொழுது ரொம்ப கவனம் இருக்கட்டும். இன்று காதல் வயப்பட கூடிய சூழல் இருக்கும். திருமண முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் சிறப்பாகவே இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது, பிங்க் நிறம் உங்களுக்கு ஓரளவு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று இல்லத்தில் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: பிங்க் மற்றும் நீல நிறம்