Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு.. ஆன்மிக எண்ணம் மேலோங்கும்..மனம் மகிழ்ச்சியாக இருக்கும்..!!

கன்னி ராசி அன்பர்கள், இன்று புதியவர்கள் உதவி கேட்டு உங்களை தொந்தரவு செய்யக்கூடும்,  இயன்ற அளவில் நீங்களும் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிகமாகவே பணிபுரிவீர்கள், பணவரவு திருப்திகரமாகவே இருக்கும். பயணத்தில் பாதுகாப்பை தவறாமல் பின்பற்ற வேண்டும். ஆனால் பழைய பாக்கிகளை வசூலிப்பதில் அலைய வேண்டியிருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும் அதேநேரத்தில் பணிகளை செய்து முடிக்க தேவையான வசதி வாய்ப்புகளும் கிடைக்கும். இன்று  அக்கம் பக்கத்தாரின் அன்பு தொல்லை அதிகமாக இருக்கும். இன்று காதல் கைகூடும் நாளாகவே இருக்கும். திருமண முயற்சிகள் கூட ரொம்ப சிறப்பாகவே நடக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வெற்றி வாய்ப்புக்கள் ஏற்படும், ஆசியர்கள்  ஒத்துழைப்பும் பரிபூரணமாக  கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அது உங்களுக்கு அதிர்ஷ்ட்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று  சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்:  7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை

Categories

Tech |