கன்னி ராசி அன்பர்கள், இன்று விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும், தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும், கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். பண தேவைகள் பூர்த்தி ஆகும். இன்று மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றத்தை அடைய உதவும். அடுத்தவர் ஆச்சர்யப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.
தடை பட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்திய பேச்சால் ஆதாயம் இருக்கும், பெண்களுக்கு புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவார்கள், இருந்தாலும், புதிய நபர் என்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருங்கள்.
இன்று நீங்கள் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும், பயணத்தின் பொழுது பொருட்கள் மீது கவனமாக இருங்கள், இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி, நல்ல முன்னேற்றமான சூழ்நிலை கொடுக்கும்.மேற் கல்விக்கான முயற்சியில் வெற்றி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை