கன்னி ராசி அன்பர்களே, இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும் நாளாக இருக்கும் நீண்ட தூர பயணங்கள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். புதிய தொழில் தொடங்க எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள், எதிர்பார்த்த முன்னேற்றம் கொஞ்சம் தாமதப்பட்டே வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும்.
இன்று எந்த ஒரு வேலையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும். எந்த ஒரு முடிவையும் எடுக்கும் போது ஒரு முறைக்கு பல முறை யோசித்து எடுப்பது ரொம்ப நல்லது. இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு வெற்றி வாய்ப்பு ஏற்படும் விளையாட்டு துறையில் உள்ள மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் இன்று சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை