கன்னி ராசி அன்பர்களே …! எதிர்ப்புகள் அடங்கும் நாள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்பட கூடிய வாய்ப்புகள் இருக்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை நீங்கள் பெற கூடும். இன்று மற்றவர் பார்வையில் படும்படி பலத்தை மட்டும் என்ன வேண்டாம்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டியிருக்கும். அலைச்சல் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். உடல் ஆரோக்கியம் அதற்கு ஏற்றார் போல் பார்த்துக் கொள்ளுங்கள். வாடிக்கையாளரிடம் அனுசரித்து பேசுங்கள். தயவுசெய்து குடும்பத்தாரிடமும் கோபப்பட வேண்டாம். இன்று கோபம் கொஞ்சம் தலை தூக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள்.
இன்று ஓரளவு அதிக வாய்ப்புகள் இருக்கும். பெண்களால் ஆதாயம் அடைவீர்கள். பெண்களால் மன சந்தோஷமும் அடைவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அது உங்களைக் அதிஷ்டத்தை கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்