கன்னி ராசி அன்பர்களே …! தனலாபம் நல்ல முன்னேற்றத்தையும், மதிப்பு, மரியாதையும் கூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மனைவி மக்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பெண்களின் உதவிகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள், கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.
நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சினைகள் சாதகமாக முடியும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் முற்றிலும் நீங்கி மனமகிழ்ச்சி கொள்வீர்கள். இன்று குழந்தைகளுக்காக நீங்கள் கடுமையாக பாடுபடுவீர்கள். அதேபோல் இன்று உடல் ஆரோக்கியம் உங்களுக்கு மிக சிறப்பாக இருக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை. உள்ளமும் உற்சாகமாக செயல்படும்.
மிக முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று குருபகவான் வழிபாடும்,சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்:4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.