கன்னி ராசி அன்பர்களே …! குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை நீங்கள் எதிர்க்க வேண்டி இருக்கும், அதனால் இன்று எச்சரிக்கையாக தான் நீங்கள் இருக்க வேண்டும். மிக முக்கியமாக வாக்குவாதங்கள் யாரிடமும் செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்.
சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள், அதுதான் இன்றைய நாள் உங்களுக்கு எதிர்ப்புகள் ஓரளவு விலகிச்செல்லும். பணவரவு ஓரளவு இருக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கையும் இருக்கும். இன்று கூடுமானவரை உங்களுடைய நிதி மேலாண்மையில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று காதலர்கள் தயவுசெய்து வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
மற்றவர்கள் கூறுவதை கூர்ந்து கவனித்த பின்னர் நீங்கள் பதில் கூறுவது ரொம்ப சிறப்பு. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொள்வது ரொம்ப சிறப்பு. அது உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதேபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.