கன்னி ராசி அன்பர்களே, இன்று வாழ்க்கையில் சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்வதற்கான சூழ்நிலைகளில் ஈடுபடுவீர்கள், தடைகள் அனைத்தும் உங்களை விட்டு விலகிச் செல்லும். காரியங்கள் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். தன்னம்பிக்கை கூடும். முயற்சி திருவினையாக்கும் என்ற முன்னேற முயற்சிகளில் மேற்கொள்வீர்கள். பணத்தேவைகள் மட்டும் கொஞ்சம் இருக்கும். எதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் இருக்கும்.
வேலைப்பளு கூடும், முக்கிய நபர்களின் சந்திப்பும், அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினையும் இல்லை, சிறப்பாகவே இருக்கும். மனதில் தைரியம் கூடும். புதிய நம்பிக்கையும் உண்டாகும். எடுத்த காரியங்களும் சிறப்பாகவே நடக்கும். எதிர்பாராத திருப்பங்களும் இன்று ஏற்படும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும்.
இன்று மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் இருக்கும். கல்விக்காக கடுமையாக உழைப்பீர்கள். பெரு வெற்றியும் பெறுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று முருகப்பெருமான் வழிபாட்டையும் சேர்த்து மேற்கொள்ளுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்