Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…எச்சரிக்கையாக இருங்கள்…மதிப்பு கூடும் …!

கன்னி ராசி அன்பர்களே …!     கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி விடுவீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை உணர்ந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுடைய ஆலோசனையை ஏற்பார்கள், மதிப்பும் மரியாதையும் கூடும் நாளாக இன்று இருக்கும்.

அதே போல இன்று எதிர் பாலினரிடம் பழகும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம். தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டுத் தொழிலில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் எச்சரிக்கையாக தான் இருக்க வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்களைத் அனுசரித்துச் செல்லுங்கள், அவரிடம் எந்தவித கோபத்தையும் காட்டாதீர்கள். கணவன் மனைவிக்கு இடையே கொஞ்சம் பூசல்கள் இருக்கும். அதை போலவே காதலும் இன்று பொறுமை காப்பது ரொம்ப நல்லது.

இன்று வியாபாரம் மேன்மைக்கு சில சூட்சமங்கள் உங்களுக்கு உதவும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் பச்சை நிறம் உங்களுக்கு  அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் இருக்கலாம்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |