கன்னி ராசி அன்பர்களே …! இன்று மாற்றவர்களுக்காக எந்தவித உத்திரவாதமும் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் உள்ள மந்த நிலை மாறி கூடுதல் சிரத்தையுடன் காரியங்களை கவனிப்பது அவசியம். வாழ்க்கை தரம் உயரும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடந்தேறும் வெற்றிபெற தடைகளைத் தாண்டி உழைக்க வேண்டியிருக்கும்.
ஆலோசனைபடி செயல்படுவது நல்லது. வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்கப்பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றியும் கிடைக்கும். நிதி நிலைமை ஏற்படும். கூடுமானவரை இன்று வாக்குறுதி மட்டும் யாருக்கும் கொடுக்க வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். காதலர்கள் இன்று பொறுமை காப்பது அவசியம்.
தேவை இல்லாத பேச்சை பேசி வளர்த்துக்கொண்டு சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே என்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.