Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…சச்சரவுகள் நீங்கும்…சுபிட்சம் உண்டாகும்…!

கன்னி ராசி அன்பர்களே …!     இன்று பெரியவர்களின் ஆலோசனை ஏற்றுக்கொள்வீர்கள். திட்டமிட்ட பணிகளின் மூலம் நன்மை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சராசரி வளர்ச்சி இருக்கும். சேமிப்பு பணத்தில் செலவுகளை மேற்கொள்வீர்கள். சுற்றுச் சூழ்நிலை தொந்தரவினால் நித்திரை கொஞ்சம் தாமதமாகலாம். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு தூங்கச் செல்வது மட்டும் ரொம்ப நல்லது.

சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி மன அமைதி, குடும்பத்தில் சுபிட்சம் போன்றவை ஏற்படும். ஒரு குறிக்கோளை மனதில் வைத்து துணிவுடன் செயலாற்றுவதால் பல காரியங்கள் சிறப்பாக முடியும். ஆதரவற்ற தமிழர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட உங்களுடைய உதவியால் அனைவரும் பெருமை கொள்வார்கள். மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

இன்று முடிந்தால் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் மிக சிறப்பாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |