Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…சிந்தித்து செயல்படுங்கள்…நன்மை உண்டாகும்…!

கன்னி ராசி அன்பர்களே …!     இன்று தொட்ட காரியம் அனைத்தும் துளிர்விடும் நாளாக இருக்கும். தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி நல்ல பலன் கொடுக்கும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். வீடு ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் விலகி நன்மை ஏற்படும். குடியிருக்கும் வீட்டினை மாற்ற சிலருக்கு வாய்ப்பு இருக்கும். பணவரவில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கொடுக்கல் வாங்கலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். அதேபோல தந்தையாரின் உடல்நிலையில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இன்று எதைப்பற்றியும் சிந்திக்காமல் காரியத்தை மட்டும் நீங்கள் எதிர் கொண்டாலே போதுமானது. முடிந்தால் இறை வழிபாட்டுடன் காரங்களை மேற்கொள்ளுங்கள் அனைத்து விஷயங்களும் நல்லபடியாக நடக்கும்.

சுப காரியங்களுக்கான வாய்ப்புகள் தேடி வரக்கூடும். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். காதலில் முன்னேற்ற சூழலும் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை எப்பொழுதும் உங்களுக்கு  அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |