Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…அலைச்சல் உண்டாகும்…மகிழ்ச்சி அதிகாரிக்கும்…!

கன்னி ராசி அன்பர்களே …!   இன்று செயலில் வெற்றி பெற எளிதான வழி பிறக்கும். நண்பர்கள் தேவையான உதவியை மனமுவந்து வழங்குவார்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண பரிவர்த்தனையும் திருப்திகரமாக இருக்கும். வெளியூர் பயணங்களை பயன் அறிந்து மேற்கொள்வதால் தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும் திட்டமிட்டதை விட கூடுதல் செலவு இருக்கும்.

பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்கள் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசிய கையாள்வதில் கவனம் வேண்டும். தயவு செய்து உங்களுடைய ரகசியங்களை மற்றவரிடம் பகிர வேண்டாம். இன்று காதலர்கள் பொறுமையாகவும் நிதானமாகவும் பேசுங்கள்.

தேவை இல்லாத விஷயத்தை பேசிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு எப்பொழுதும் அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் மிகச்சிறப்பாக காரியங்கள் நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |