கன்னி ராசி அன்பர்களே …! பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பாதியில் நின்ற கட்டிடப் பணி மீண்டும் தொடரும் பக்கபலமாக இருக்கும். நண்பர்கள் சிக்கல்கள் தீரும். கலைத்துறையினருக்கு சீரான நிலை காணப்படும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகமாகவே இருக்கும். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். அதை பற்றி எல்லாம் கவலை படாதீர்கள்.
மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கும். மென்மையான சூழல் நிலவும். முடிந்தால் குலதெய்வத்தை மனதில் நினைவில் வைத்துக்கொண்டு காரியத்தை எதிர்கொள்ளுங்கள் மிகச் சிறப்பாக நடக்கும். இன்று காதலர்களுக்கு இனிமை காணும் நாளாக இருந்தாலும் பேச்சில் எப்போதும் கவனம் வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். இருந்தாலும் சில வாக்குவாதங்கள் அவ்வப்போது வந்து தான் செல்லும்.
கூடுமானவரை பேசித் தீர்த்துக் கொள்வது ரொம்ப நல்லது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.