Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…தடைகல் உண்டாகும்…லாபம் அதிகரிக்கும்…!

கன்னி ராசி அன்பர்களே …!    இது தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடித்துக் கொள்வீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் கொட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவு கொடுப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். தொழிலில் கூடுதல் கவனம் வேண்டும். ஒருமுறைக்கு இருமுறை தொழில் சார்ந்த விஷயங்களை முடிவு எடுப்பதற்கு முன் யோசித்து முடிவு எடுங்கள்.

பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு முக்கிய பணியை செய்யுங்கள். குடும்பத்தாரிடம் கூடுமானவரை அன்பாக நடந்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் கணவன் மனைவி இருவரும் எதையும் பேசி எடுக்க முடிவு நல்ல முடிவு கொடுக்கும். கூடுமானவரை அவரிடம் அன்பை காட்டுங்கள். அதேபோல எதிர்பாலினரிடம் பழகும் போது கொஞ்சம் கவனமாக தான் இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு ஏதும் வேண்டாம்

தள்ளிப்போடுவது ரொம்ப நல்லது. உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்துக்கொள்ள உணவில் கண்டிப்பாக கட்டுப்பாடு வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று புதன் கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |