கன்னி ராசி அன்பர்களே …!
இன்று உங்களுடைய மனம், செயலில் உற்சாகம் நிறைந்திருக்கும். நண்பரிடம் கலை உணர்வுடன் பேசுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி நிறைவேறும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள்.இன்று வியாபாரம் போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள்.
வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். புதிதாக வேலை வாய்ப்புகளும் அமையும். வெளியூரில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். இன்று எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்காமல் காரியத்தை மட்டும் கவனமாக செய்யுங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சரியான நேரத்திற்கு நீங்கள் உணவை எடுத்துக்கொள்வது ரொம்ப நல்லது. அதே போல சரியான நேரத்திற்கு தூங்கச் செல்வது ரொம்ப நல்லது .
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிவது மிகவும் சிறப்பு. இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமல்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு, கிழக்கு
அதிஷ்ட எண்: 6 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: நீலம் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.