கன்னி ராசி அன்பர்களே …! சிறிய செயலும் கடினமாகவே உங்களுக்கு தோன்றும். நண்பனின் ஆலோசனை நம்பிக்கை கொடுப்பதாக அமையும். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணச் செலவில் சிக்கனம் கண்டிப்பாக வேண்டும். வெளியூர் பயணங்களை பயன் அறிந்து கொள்ளுங்கள். தேவையில்லாத வீண் அலைச்சலைத் கண்டிப்பாக நீங்கள் தவிர்க்க வேண்டும். அக்கம்பக்கத்தினர் உடன் இருந்து வந்த மன அழுத்தம் நீக்கும்.
சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பணவரவு ஓரளவு திருப்தியை கொடுக்கும். வீடு மனை பற்றிய கவலையும் குடும்ப பிரச்சனைகள் அனைத்துமே தீரும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்யும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். தேவையில்லாத வாக்குவாதத்தில் யாரிடமும் ஈடுபடாதீர்கள். இன்று புதியதாக காதலில் வயப்படக்கூடிய சூழல் இருக்கும். அன்பாக நடந்து கொள்வீர்கள் இருந்தாலும் ஒரு சில நேரங்களில் கோபமும் கொஞ்சம் தலைதூக்கும் கவனம் கொள்ளுங்கள்.
எதையும் எச்சரிக்கையாக செய்யுங்கள் எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பழுப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு மற்றும் வெளிர் நீல நிறம்.