Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…எதிர்ப்புகள் குறையும்…அன்பு அதிகரிக்கும்…!

கன்னி ராசி அன்பர்களே …!    பிள்ளைகளின் உடல் நிலையில் கவனம் வேண்டும். அடிக்கடி வெளியூர் பயணங்களில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். அனைவருடனும் அன்பாகவும் சுமுகமாகவும் பழகினால் எதிர்ப்புகள் குறையும். எல்லா காரியங்களும் நன்மையாகவே நடக்கும் மனதில் திருப்தியான சூழல் இருக்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

மற்றவரிடம் கெட்ட பெயரை மட்டும் வாங்காமல் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது ரொம்ப நல்லது. மற்றவரிடம் உரையாடும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். கோபத்தை இன்று நீங்கள் அடக்கி விட்டால் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு மிகச் சிறப்பாக இருக்கும். காரியங்களை செய்யும் பொழுது திட்டமிட்டுச் செய்யுங்கள். அதேபோல கொடுக்கல் வாங்கல் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

பழைய பாக்கிகளை வசூல் செய்யும் போது கோபப்படாமல் வசூல் செய்யுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |