கன்னி ராசி அன்பர்களே …! வருமானம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் மனம் வருந்தும் படியான குறையும் சம்பவங்களும் நடக்கும். வாழ்க்கை தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். தொழிலில் சிலருக்காக பணத்தை செலவிடும் சூழ்நிலை அமையும். வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் பணிபுரிய நேரலாம். மறைமுக எதிர்ப்புகள் மாறும். எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி அமையும்.
சாதுர்யமான பேச்சு வெற்றிக்கு உதவும். ஆனால் வாகனத்தில் செல்லும் போது பொறுமை வேண்டும். ஆயுதங்களை பயன்படுத்தும் பொழுதும் ரொம்ப கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவரிடம் அன்பாக பேசுங்கள்.இன்று யாருக்கும் ஜாமீன் வாக்குறுதிகளை தயவுசெய்து கொடுக்காதீர்கள். செயல்பாடுகள் இன்று வெற்றிக்கு வழிவகுக்கும். முடிந்தால் இறை வழிபாட்டுடன் ஈடுபடுங்கள் காரியங்கள் மிக சிறப்பாக இருக்கும்.
திருமணத்திற்காக காத்திருந்தவர்கள் கொஞ்சம் தகவல் வருவதில் சிக்கல்களும், தாமதமும் இருக்கும். பொறுமை காக்க வேண்டும் யாரிடமும் இன்று புதிதாக கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்.